Blogger Widgets

சுந்தர பாண்டியன் - BLOCKBUSTER சினிமா விமர்சனம்

 சுவாரஸ்யம் சுவாரஸ்யம் சுவாரஸ்யம்...

 படம் தொடக்கம் முதலே நம்மைத் தொற்றும் சுவாரஸ்யம் கிளைமாக்ஸ்வரை விலகாமல் கொடுத்த இயக்குனருக்கு ஒரு ஓ! இடைவேளை வரைக்கும் ஒரே காமெடி, கலாய்த்தல், காதல். அதன்பின் இறுதிவரை ட்விஸ்ட், ட்விஸ்ட், ட்விஸ்ட்.

 சூரி. வடிவேலு இல்லாத குறையை போக்குகிறார். முதல்பாதி முழுதும் அவரது நக்கல்களில் சிரிக்காத ஆளே இல்லை, காட்சிக்கு காட்சி கைதட்டல். சில மாதங்களுக்கு ஊரெல்லாம் இவர் டையலாக் முனுமுனுக்கும். இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருது கிடைக்கலாம் :-)

 சசிக்குமார் - வழக்கம்போல செம. ஒரு தயாரிப்பாளரின் வெற்றி என்பது தேர்வு செய்யும் கதையிலேயே உள்ளது என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்.

 லட்சுமி மேனன் - கண்ணு மீனு மாதிரி. முறைத்தல், குறும்புத்தனம், நடிப்பு அடடா தமிழ் சினிமாவுக்கு நடிக்கிற ஒரு நடிகை கிடைச்சிட்டாங்க :-)


நடிப்பு: சசிகுமார்லட்சுமி மேனன்சூரி
தயாரிப்பு: சசிகுமார்
இயக்கம்: பிரபாகரன்

கதை :

 ஹீரோயினை சசியின் நண்பர் காதலிக்கிறார். நண்பன் காதலிப்பதற்கு உதவுகிறார் சசிக்குமார். அப்போது சசியின் நண்பரின் நண்பன் (அப்புக்குட்டி) தானும் காதலிப்பதாய் சொல்ல ஆளுக்கு ஒரு மாதம் என பிரித்துக்கொடுக்கிறார். அதில் முதலில் அப்புக்குட்டி தோற்றுவிட, பின் தன் நண்பனுக்காக காதலைச் சொல்லப் போகுமிடத்தில், ஹீரோயின் சசிக்குமாரை காதலிப்பதாய் சொல்கிறார் (ட்விஸ்ட் 1- பல வருடங்களுக்கு முன்பு சசிக்குமார் காதலைச் சொல்லி ஏற்காமல் சென்றவர்தான் ஹீரோயின்). 

  பின்னர் பஸ்சில் சசிக்கும், அப்புக்குட்டிக்கும் ஏற்படும் கைகலப்பில் கீழே விழுந்து செத்துப்போகிறார் அப்புக்குட்டி (ட்விஸ்ட் 2). கொலைப்பழி சசிக்குமார் மீது. ஜெயிலுக்குப் போகிறார் சசிக்குமார். 

  செத்துப்போன அப்புக்குட்டியின் நண்பர்கள் சசியைக் கொல்லத் துடிக்கிறார்கள் (ட்விஸ்ட் 3). ஹீரோயினுக்கும் அவர் அக்கா கணவரின் தம்பிக்கும் (இவர் சசியின் இன்னொரு நண்பர் - ஹீரோயினை பல வருடங்களாக இவரும் ஒருதலையாய் காதலித்திருக்கிறார்)  நிச்சயம் செய்கிறார்கள், அதுவும் சசியால் தடைபட அவரும் சசியைக் கொல்லத்துடிக்கிறார் (ட்விஸ்ட் 4). மீதியை திரையில் காணவும். இன்னுமொரு 5 ட்விஸ்ட் பாக்கி இருக்கிறது.

சூப்பர் வசனங்கள்:

  • (டீ கடையில்) மாப்ளே ஒரு டீ சொல்லு மாப்ளே,
      ஏன் அதை நீயே சொல்லுறது.


  • ஜி அடிக்கடி ரொம்ப நல்லவராகறீங்க ஜீ! என்கூடத்தானடா காலேஜ்ல ஒண்ணா படிச்ச?

  • (சசி தன் அத்தை பெண்ணிடம்) என்ன முந்திரி பருப்பு பங்காளிக்கா?
      இல்லை பாயாசத்துக்கு.
      பாயாசம் யாரு பங்காளிக்குத்தானே?
      (சூரி சசியிடம்) நீ வேண்ணா போய் குடிச்சிட்டு வாயேன்?

  • ஹீரோயின் தோழியிடம் நீ ஏண்டி பதட்டமா இருக்க?
     அவன் அவசரத்துல உன்கிட்ட லவ்வை சொல்லாம என்கிட்டே சொல்லிட்டான்னா?


  • பொண்ணுங்க விரும்பினவனத்தான் கட்டிக்கனும்னு அடம்புடிச்சிருந்தா இன்னிக்கி முக்காவாசிப்பேருக்கு கல்யாணமே ஆகியிருக்காது. கஷ்டப்படும்போது காதலிச்சவனையே கட்டியிருக்கலாம்னு தோனும்தான் ஆனா சந்தோசமா இருக்கும்போது கட்டின புருஷன்தான் உசிரவிட மேலனு தோணும்.

  • உன்னை ஒரு மாசம்னு ஏலம் விட்டது போய் இப்போ காண்டிராக்ட் விட்டுட்டு இருக்கானுக.


  • புதுசா பழகுகிரவங்ககிட்டே பார்த்து சூதனமா நடந்துக்கோனு சொல்லுவாங்க, பழகுன நீங்களே இப்படி பண்ணினா பின்னே யாரை நம்புவது?


நிறைகள்:

 திரைக்கதை சூப்பர். சசியை மறக்கடிக்க ஹீரோயினிடம் சொல்லும் வசனங்கள், சசிக்குமார் தன் அத்தை பொண்ணைக் கலாய்ப்பது, ஜெயிலிலிருந்து வந்தவுடன் அவரிடம் அழும் பாட்டிகள், சசியின் அப்பா பெண் பார்க்க போகும்போது அவர் காட்டும் கம்பீரம், ஹீரோயின் சசிக்குமார் போல தன் தோழியிடம் நடித்துக்காட்டுவது என் கதையின் ஒவ்வொரு ஃபிரேமும் கவர்கிறது.

  எல்லா கேரக்டர்களுமே கன கச்சிதம். ஹீரோயின் லட்சுமி மேனன் முகத்தில் இருக்கும் தழும்பை மறைக்காமல் கேமராவில் காட்டும் ஒரிஜினாலிட்டிக்கு ஒரு சல்யூட். பாடல்களில் இசை சொல்லிக்கொள்ளும்படி இல்லை, ஆனால் பாடல்களைக் குறும்புத்தனத்துடன் எடுத்த விதம் அதை மறைத்துவிடுகிறது.

குறைகள்:

  இந்த மாதிரி சூப்பர் படத்தில எல்லாம் குறை கண்டுபிடிக்கிற உன் ஐன்ஸ்டீன் மூளையை கழட்டி வச்சிட்டு போய் படத்த பாரப்பு. வயிறு குலுங்க சிரியப்பு.

பாமரன் மார்க் - 8.5 / 10 (சுந்தர பாண்டியன் - BLOCKBUSTER)

டிஸ்கி: நான் படத்தை திரும்பவும் பார்க்க போகிறேன் :-)


4 COMMENTS:

  1. கலக்கலான உண்மையான விமர்சனம்...

    ReplyDelete
  2. சூரி இந்த படத்துல தன் பங்கை அருமையா செய்திருக்கிறதா சொல்லுறாங்க..கண்டிப்பா பார்க்கணும் தல!

    ReplyDelete
    Replies
    1. செம காமெடி. கண்டிப்பா பாருங்க தல.

      Delete
  3. செம காமெடி. கண்டிப்பா பாருங்க

    ReplyDelete