Blogger Widgets

அக்னிபாத் - காட்டு காட்டுனு காட்டுறாங்கோ!

   ஹிருத்திக் ரோஷன், ப்ரியங்கா சோப்ரா, காத்ரீனா கைப் என மூன்று ஹீரோயின்கள். ஏன்னா ஹீரோயின்களைவிட ஹிருத்திக் ரோஷன்தான் அதிக சீன்களில் சட்டையைக் கழட்டிவிட்டுத் தன் பாடியைக் காட்டுகிறார். சில நேரங்களில் யாரு ஹீரோயின் என்று நமக்கே குழப்பம் வந்துவிடுகிறது. சிக்ஸ் பேக் இருந்தால் அதைப் படம் முழுவதும் காட்டிகிட்டே இருப்பீங்களாடா? அவ்வ்வ்..


   காத்ரீனா கைப் வழக்கம்போல் ஒரு பாட்டுக்கு வந்து தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு காட்டிவிட்டுப் போகிறார். (ம்ம்ம்ம் கொடுத்து வச்சிருக்கனும்! போறதே இதுக்குத்தானே!)


   பிரியங்கா சோப்ரா பார்க்க சகிக்கலை. முழு முகத்திலும் உதடு மட்டும்தான் தெரிகிறது, யார் பண்ணின புண்ணியமோ!

   
   மசாலாப் படம் என்பதாலோ என்னவோ, டைரக்டர் படம் எடுக்கும்போது மூளையைக் கழட்டி முதுகுக்குப் பின்னாடி வச்சிட்டார் போல - படம் முழுவதும் ஓட்டைகள் ஸாரி படமே ஓட்டைதான்! இந்தப் படத்தில் நகைச்சுவையே கிடையாது. ஆனால் ஒவ்வொரு சீனிலும் சிரித்தேன். அம்புட்டு காமெடி பண்ணியிருக்கார் டைரு டக்டரு!

   சஞ்சய் தத்: கருப்பு உடை அணிந்து, மொட்டையுடன் பற்கள் சிவப்பாய் இருந்தால் கொடூர வில்லானாம்,  ஸ்ஸ்ஸ்! - இது கூட பரவாயில்லை, பதினைந்து வருடம் கழித்தும் இவரது முகம், உடை மாறாதாம்! வயது கூட ஏறவில்லை. பதினைந்து வருடத்திற்கு பிறகும் வயது மாறாமல் உடல் இளைக்காமல் இருக்கும் ஒரே வில்லன் இவர்தான். (ஏண்டா பார்க்கிறவன் கேனையன்னா எதவேணும்னாலும் காட்டுவீங்களாடா?)

ஹீரோவின் அப்பாவைக் கொல்லும்போதும் சரி, பதினைந்து வருடம் கழித்து  ஹீரோவைக் கொல்லும்போதும் சரி இவர் உடல், கெட் அப் இதேதான்!


   கிளைமாக்ஸ் காட்சியில் சண்டையின்போது மேல்மாடியிலிருந்து விழப்போகும் ஹீரோவைக் காப்பாற்றி, சண்டை போட்டு கொல்ல முயற்சிக்கிறார் வில்லன் சஞ்சய் தத்! (ஸ்ஸ்ஸ் முடியல!) - விட்டிருந்தா அவனே செத்திருப்பானேடா!

   அந்த சண்டையில் ஹிருத்திக் ரோஷனை ஐந்து முறை கழுத்து, வயிறு, முதுகு என எல்லாப்பக்கமும் கத்தியால் குத்தி ஒரு கிலோமீட்டர் இழுத்துச் செல்கிறார் வில்லன். தன் அப்பாவைக் கொன்ற இடத்தைப் பார்த்ததும் துள்ளி எழுகிறார் ஹீரோ. உடம்பில் ஒரு கத்திக் குத்தையும் காணோம்! (கடல்லேயே இல்லையாம்!)

   அக்னிபாத் என்பதால் படம் முழுவதும் ரத்தத்தைக் காண்பிக்கிறார்கள். பிறகு எல்லோரையும் கொன்றுவிடுகிறார்கள். ஹீரோ, ஹீரோயின், ஹீரோவின் அப்பா, வில்லன், வில்லனின் அப்பா, ரவுடிகள் என எல்லோரும் செத்துப் போகிறார்கள் – அக்னிபாத்தாம்!

   சில படங்கள் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணம், இந்தப் படம் எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு உதாரணம். இதை துபாய்க்கெல்லாம் வந்து விளம்பரம் செய்தார்கள் (ஓடாத வண்டிக்குத்தானே விளம்பரம் தேவைப்படும்?)

   இந்தப் படத்திற்கு ஒரு சிறப்பு உண்டு, பத்து வருடத்திற்கு பின் வந்திருக்கும் ஒரு கிராமத்தைப் பற்றிய பாலிவுட் படம். போடா நீங்களும் உங்க பாலிவுட்டும்!

மார்க்:
அக்னிபாத்      = ரா ஒன் - 1
ரா- ஒன்         = 1/10



3 COMMENTS:

  1. comments regarding Katrina and Priyanka chopra are nice.

    ReplyDelete
  2. படம் தரவிறக்கம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது விரைவில் பிரியாவை பார்த்துடுவேன்

    ReplyDelete