Blogger Widgets

காதலில் தோற்பது எப்படி? காதலர் தின ஸ்பெஷல்!

  காதலில் தோற்பது என்பது சாதாரண விசயமில்லை. கழட்டி விடுவது என்பதும் சாதாரண விசயமில்லை. அதுக்காக எம்புட்டு பாடுபடனும், எவ்வளவு தியாகம் பண்ணனும். இதைவிட முக்கியம் இதை உங்கள் ஆளும் உங்களைக் கழட்டிவிட உபயோகப்படுத்தலாம், கவனம்!

  • முதல்ல போனில் இந்த ம்ம்ம் போடுவதை விடுங்கள். பத்து நிமிடம் எதுவும் பேசலேன்னா “ரொம்ப போர் அடிக்குதா?” கேள்வி வரும், உடனே ஆமான்னு பதில் சொல்லனும்.

  • காலைல Good Morning, ராத்திரி Good Night எஸ்எம்எஸ் அனுப்புவதை நிறுத்துங்கள். நீங்க என்ன டிவி நியூஸ்லையா வேலை பார்க்குறீங்க??? (சில பக்கிகள் Automatic send later செட் பண்ணி அனுப்புறாங்கப்பா, அவ்வ்வ்வ்..)

  • “எதுக்கு இவ்வளோ அழகா இருக்க! உன்னை பார்த்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு” இப்படி எல்லாம் கொஞ்சுவதை நிறுத்துங்கள். “உன் டிரஸ் அழகா இருக்கு, ஆனா அதை நீ போட்டு கெடுத்திட்டே” இப்படி சொல்லிப் பழகுங்கள். (சில நேரங்களில் அடி விழலாம்! என்ன செய்ய தோற்பது என்பது சாதாரண விசயமில்லை!)


  • “ஒன்னே ஒன்னு கொடேன். ப்ளீஸ்!” இப்படியெல்லாம் தப்பித்தவறிக்கூட கேட்டுவிட வேண்டாம். பிறகு பிரிவது கடினம்.

  • தோழிகளுடன் இருக்கும்போது, அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கவும். அவர்களுடனேயே பேசிக்கொண்டிருக்கவும். (யார் கண்டது வருங்காலத்தில் பிக் அப் ஆனாலும் ஆகலாம்!) ஆளுக்கு தன் அழகின்மீதே சந்தேகம் வரும். வரட்டும்! அப்புறம் எப்படி பிரிவது.

  • சும்மா சும்மா பரிசு வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டாம்! கேட்டாலும் கூட நானே உனக்கொரு பரிசு; பிறகெதற்கு இன்னொன்னு என்று சமாளிக்கவும்!

  • எந்த இடத்திற்கும் சொன்ன நேரத்திற்கு போய் அரிச்சந்திரன் என்று நிரூபிக்க வேண்டாம். ஒரு மணி மேரம் கழித்து போகவும் அல்லது போகாமல் தவித்து கடுப்பேற்றவும்.

  • எப்பொழுது தண்ணியடித்தாலும் போனில் கூப்பிட்டு அரை மணிநேரம் அறுக்கவும்! (மீதி நேரமெல்லாம் அவிங்கதானே அறுக்கிராங்க!). “தண்ணியடிசிருக்கியா?” என்றால் ஆம் என பதில் சொல்லவும்.

  • உடன் போகும்போதும் சரி, பேசும்போதும் சரி வழியில் வரும் பெண்களை வர்ணிக்கவும்! அப்புறம் அன்று முழுவதும் ஒரு இம்சையிலிருந்து உங்களுக்கு விடுதலை!

  • அவங்க அம்மா அப்பாவுக்கு ஐஸ் வைப்பதை எல்லாம் விட்டுவிடவும். அவிங்க அப்பனை பார்த்த உடனே தம்மை கீழே போட்டுவிட்டு நல்லவன் மாதிரியெல்லாம் நடிக்க வேண்டாம். பார்க்கும் போதுதான் புகையை ஊத வேண்டும். கண்டிப்பாய் நம் ஆளிடம் சொல்வான்(ர்), “இதுக எல்லாம் எப்படி உருப்படப் போகுதோ!” (ர் – அதான் பிரிய போறோமே பிறகெதற்கு மரியாதை?)

  • பிறந்த நாளுக்கு இரவு 12 வரை கண்விழித்திருந்து ஹாப்பி பர்த்டே சொல்லுவதையெல்லாம் விட்டுவிடவும். மதியம் கூப்பிட்டு “உனக்கு இன்னிக்கு பிறந்த நாளில்ல! மறந்தே போய்விட்டேன்! ஹாப்பி பர்த்டே!” பிறகு நீங்கள் பிரிவதற்கு முயற்சியே செய்ய வேண்டியதில்லை.

  • இதை மட்டும் சொல்லுங்க “உன்னைப் போய் நான் ஹே ஹே ஹே” அம்புட்டுதேன்! முடிந்தது வேலை! (இது என்னோட Favourite)


தோற்பது எப்படின்னு தெரிந்தால்தான் வெற்றி பெற முடியும்! 



2 COMMENTS:

  1. It is niсe to fіnԁ dеcent content fοг оncе, I am
    gеtting siсκ of the contіnual drivel I fіnԁ on a dаіlу basis, thanks.
    Here is my web-site How To Grow Taller

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete