Blogger Widgets

பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!

 மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கொரு உதாரணம் பொங்கல். பொங்கல் என்பதை இன்னும் மதத்துடன் இணைக்காமல் இன்னும்கூட எல்லோரும் கொண்டாடும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக இருப்பதே சாட்சி.

 சங்ககாலம் முதலே கி.மு.200ம் நூற்றாண்டுக்கு முன்னரே பொங்கல் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உண்டு.

பொங்கல் தோன்றிய விதம் - தைந்நீராடல்

பொங்கலுக்கெல்லாம் மூதாதை விழா எனப்படுது தைந்நீராடல். சங்ககாலத்தில் தை மாதத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள் தைநீராடல் (தை நீர் தண்மை உடையது. இங்கு தண்மை என்ற சொல்லிற்கு வெதுவெதுப்பு என்று பொருள்) எனக் குறிப்பிடுகின்றன.
 கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையிலும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவையிலும் மார்கழி/தை நீராடல் பற்றிக் குறிப்பிடுகிறார்)


பொங்கல் என்றால் என்ன?

தைப் பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை மூன்று நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

1. போகி : பொங்கலிற்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் தமது பழைய ஆடைகளை எறிந்துவிடும் விழா. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். 

2. சூரியப் பொங்கல் : சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள்.

3. மாட்டுப் பொங்கல் : விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும் பொங்கல் கால்நடைகளுற்கும், பறவைகளுக்கும் வழங்கப்படும்

 இனி பொங்கல் கொண்டாடப்படும் விதம் பற்றிக் காண்போம்!



பொங்கல்: ( Pongal ) ஜனவரி 13, 14, 15 தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பொங்கல் என்ற பெயரிலும், கர்நாடகா, ஆந்திராவில் மகாசங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா. மேலும் தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர், நார்வே, சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, மியான்மர், இந்தோனேசியா, மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமீரகத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

லோஹ்ரி :Lohri ) ஜனவரி 13-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கொண்டாடப்படும் கோதுமை அறுவடைத் திருவிழா.

மாஹ் பிகு :Magh Bihu, Bhogali Bihu ) ஜனவரி 14, 15-ல் அஸ்ஸாமில் கொண்டாடப்படும் நெல் அறுவடைத் திருவிழா.

மஹா சங்கராந்தி: (Makar Sakranti) ஜனவரி 14-ல் பனிக்காலம் முடிந்து சூரியன் வடக்கு நோக்கி நகரும் நாள். (தனுசத்திலிருந்து மகர ராசிக்கு இடம்பெயரும் நாள்). இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ஜனவரி 14 முதல் பகல் அதிகமாகவும், இரவு குறைவாகவும் மாறும் நாள். இந்தியா முழுவதும் இந்நாள் அறுவடைத் திருநாள்.
வரப்புயர நீருயரும்நீருயர நெல்லுயரும்நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்!. (கோ - அரசன்)
 இப்படி 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் இனம், மதம் கடந்த ஒரு நன்றி தெரிவிக்கும் விழாவை ஏன் ஒரு உலக்த்திருவிழாவாகக் கொண்டாடக்கூடாது?

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!


0 COMMENTS:

Post a Comment