Blogger Widgets

2012 டாப் 10 தமிழ் திரைப்படங்கள்!

10. காதலில் சொதப்புவது எப்படி?

  காதல்ல சொதப்புவது எப்படின்னு நம்மல்ல எல்லோருக்குமே தெரியும். குறைந்தது 3/4 பேரிடமாவது சொதப்பி இருப்போம். அந்த அனுபவத்தையெல்லாம் சேர்த்து படமாய்க்கொடுத்தால் படம் ஓடாமலா இருக்கும்?



9. வழக்கு எண் 18/9

  பார்த்த எல்லாரும் பாராட்டியும் யாருமே தியேட்டருக்குப் படம் பார்க்க போகலை! அதனால படத்தைத் தியேட்டரைவிட்டு ஓட்டிவிட்டார்கள். கிளைமாக்ஸ்ல ஒரு குத்துப்பாட்டு வையுங்கையான்னா கேட்கிராங்களா? – தெலுகு ரசிகன்

8. நான்

  விஜய் ஏன்டனி பற்றி அடுத்த எஸ்.ஜே சூர்யா உருவாகிட்டாருன்னு ஊருக்குள்ளே பேசும்போது, நான் ரீலிசாகி நான் எஸ்.ஜே சூர்யா இல்லை, நான் ஒரு சேரன்ன்னு நிரூபித்த படம் நான் (ஆகா எத்தனை நான்? ஆனா நான் ஒண்ணுதானே?).

                             

7. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்

  ஒரு உண்மைக்கதையை எடுத்து சிரி சிரின்னு சிரிக்க வச்ச படம்!! அதுவும் பக்சு கேரக்டர் சான்சே இல்லை. கிளைமாக்ஸ்ல “எவன்யா தூக்கமாத்திரை கொடுக்கக்கூடாதுன்னு சொன்னது”ன்னு டாக்டர் கேட்கும்போது பக்சு முகம் இருக்கே.....

6. நண்பன்

  3 IDIOTS பட ரீமேக்னாலும் ஒரு இடத்தில்கூட அதைக்கண்டுபிடிக்கவே முடியாது, ஏன்னா முழுவதுமே அப்பிடியேதானே இருந்துச்சு? ஆனால் படம் இலியானா இடை போல் இல்லாமல் அவரோட மனசுபோல் நல்லாவே ஓடிச்சு.
                               

5. நீதானே என் பொன்வசந்தம்

  இந்தப்படம் கலவையான விமர்சனகளைப் பெற்றாலும் பேரரசு ரசிகர்களிடமும். தெலுகு ரசிகர்களிடமும் கடும் எதிர்ப்பைப் பெற்றது. ஸ்லோவா போகுதாம்! மற்றபடி காதலர்கள் பார்க்க வேண்டியபடம்!

                             

4. துப்பாக்கி

  இந்தப்படம் ஓட மிக முக்கிய காரணங்கள் – இந்தப்படத்தின் இயக்குனர் பேரரசு இல்லை, இந்தப்படத்தில் விஜயின் தங்கை வழக்கம்போல வில்லனால் அடிபட்டு சாகவில்லை!

                             

3. ஒரு கல் ஒரு கண்ணாடி

  எல்லோரும் படம் பார்க்கபோனது ஹன்சிகாவுக்காக. அங்கபோய் பார்த்தா சந்தானம் காமெடி சூப்பர். எந்த இடத்திலும் உதயநிதி தான் மு.க வீட்டுப்பிள்ளை என்று காட்டவில்லை அதனால படமும் ஓடிடிச்சு! ஹன்சிகா எடை போலவே தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது.

                              



2. நான் ஈ

  ஈயை வச்சு என்னவெல்லாம் பண்றாங்கையா? கிராபிக்ஸ் செம!! நாமெல்லாம் படத்தப்பார்த்துட்டு ஆஹான்னு புகழ ரஜினியோ படத்தை பார்த்துவிட்டு “ஓஹோ!” என புகழ்ந்தார். ஏன்னா அவருவழி தனி வழியாச்சே.


1. சுந்தர பாண்டியன்

  காமெடி, நகைச்சுவை, சிரிப்பு (ஆகாமூனும் ஒண்ணுதானே?) அப்புறம் கதை, ட்விஸ்ட், கிளைமாக்ஸ், பாடல்கள், நடிகர்கர் என எல்லாமே ஒன்றாய் அமைந்து 2012ம் ஆண்டின் மிகச்சிறந்த வெற்றிப்படம்!
                 
                                                          
சாட்டை, அட்டகத்தி, மதுபானக்கடை, கும்கி ஆகியவை இந்த 2012ல் வெளிவந்த குறிப்பிடத்தக்க மற்ற படங்கள்! 


4 COMMENTS:

  1. Replies
    1. யாரோ சாப்பிட்டுட்டு போய்ட்டாங்கோ! அட இங்கதான்யா இருந்துச்சு என்னோட வட்ட பிஸ்சா..

      Delete
  2. தங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி!

    ReplyDelete