இன்றுமுதல் இரண்டாம் ஆண்டில்! ஆதரவளித்த
அளித்துக்கொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி!
நீங்களும் எழுதலாம் - விருந்தினர் பதிவு:
நிலாப்பெண்ணுக்குன்னு பேர் வைத்துவிட்டு நான் மட்டும் பதிவிட்டால் எப்படி? நீங்களும் இலவசமாக பதிவிடலாம்!
பலருடைய வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள், நகைச்சுவைகள் எல்லோருக்கும் சென்று சேராமல் அவரிடமே அடைந்துபோய்விடுகிறது. அதை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இந்த நீங்களும் எழுதலாம்!
விதிமுறைகள்:
பலருடைய வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள், நகைச்சுவைகள் எல்லோருக்கும் சென்று சேராமல் அவரிடமே அடைந்துபோய்விடுகிறது. அதை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இந்த நீங்களும் எழுதலாம்!
விதிமுறைகள்:
- கண்டிப்பாக நீங்கள் எழுதியதாக இருக்க வேணும், இதுவரை வெளியாகியிருக்கக்கூடாது. தமிழில் எழுதியிருக்க வேண்டும் (ஏன்னா எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும்)
- சுவாரசியமாக எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் லவரிடம் பல்பு வாங்கினது, காமெடி வசனம், காதல், திரைப்பட விமர்சனம், நீங்கள் எடுத்த குறும்பட வீடியோ, உங்கள் ஊர்த்திருவிழா புகைப்படங்கள், அரசியல் கூத்து, நகைச்சுவை, கதை, கவிதை என எதுவாய் வேண்டுமாலும் இருக்கலாம்.
- பிறர் மனதை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் (நீயாடா இதை சொல்லுற?)
- பதிவுடன் உங்கள் பெயர், ஊர், பேஸ்புக் அல்லது ட்விட்டர் லிங்க் கொடுக்கவும். உங்களின் விபரத்தை வெளியிட வேண்டாமென்றால் அதுபற்றி குறிப்பிடவும்!
- பதிவுகளை அனுப்ப வேண்டிய முகவரி- nilavanban@nilapennukku.com
- தெரிவு செய்யப்படும் பதிவுகள் அனுப்பிய நாளிலிருந்து 10 நாட்களுக்குள் வெளியிடப்படும். பதிவு பிரசுரமாகாவிட்டால் என்னை வையக்கூடாது. (குழந்தையை திட்டிய பாவம் உங்களுக்கு எதற்கு?)
- வெளியாகும் பதிவுகளின் கமென்ட்களுக்கு நீங்களே பதிலளிக்கலாம். வெளியான உங்கள் பதிவுகளை தாராளமாய் உங்கள் ப்ளாக்கிலோ அல்லது பேஸ்புக்கிலோ நீங்கள் வெளியிட்டுக்கொள்ளலாம்.
கடந்த ஓராண்டு:
மொத்த பதிவுகள் – 190பக்கப் பார்வைகள் – 2,27,500பின்னூட்டங்கள் – 755 + 160(FB)
மன்னிக்கவும்!
ஒருவரின் செயல்களை மட்டுமே விமர்சிக்கிறோமே தவிர அவரை அல்ல. அப்படி யாரேனும் மனம்கோணும் வகையில் புண்படுத்தப்பட்டிருந்தால் மன்னிக்கவும்! (நிறைய இருப்பாங்கன்னு நினைக்கிறேன் :-)
ஒருவரின் செயல்களை மட்டுமே விமர்சிக்கிறோமே தவிர அவரை அல்ல. அப்படி யாரேனும் மனம்கோணும் வகையில் புண்படுத்தப்பட்டிருந்தால் மன்னிக்கவும்! (நிறைய இருப்பாங்கன்னு நினைக்கிறேன் :-)
"பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!"
நன்றியுடன்,
நிலவன்பன்.
டிஸ்கி: உதவியாய் இருக்கும் அனைத்து திரட்டிகளுக்கும். சமூக வலைத்தளங்களுக்கும், தேடுபொறிகளுக்கும் நன்றி!
OFFER: ஏதாவது திட்ட விரும்பினால் இன்று பின்னூட்டத்தில் திட்டிக்கொள்ளலாம்!
OFFER: ஏதாவது திட்ட விரும்பினால் இன்று பின்னூட்டத்தில் திட்டிக்கொள்ளலாம்!
Tweet |
நித்தி பத்தி ஒரு கட்டுரை எழுத விருப்பம் சார், இதில் பாலியல் சம்பந்தமா அவரை விமர்சிக்காம தத்துவ ரீதியா விமர்சிக்க இருக்கிறேன். வெளியிட நீங்க ரெடியா?
ReplyDeleteரெடி
Delete