ஒரு கொடி
ஒரு மிட்டாய்
ஒரு சுதந்திர தினம்!
அனைவருக்கும் சுதந்திரதின
நல்வாழ்த்துக்கள்.
இந்தியர்கள் போன்ற
பொருமைசாளிகளை உலகமே கண்டிருக்காது. கடந்த 66 வருடங்களாக பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் என எல்லோரது சுதந்திர உரையும்
இதேதான்!! இவ்வளவு வருடங்களாகியும் இதில் ஒருகூட நிறைவேற்றப்படவில்லையே ஏன்? இதையே
திரும்பத் திரும்பக் கேட்டும் நமக்கும் சலிக்கவில்லை, அப்போ நாம்தானே உலகின்
சிறந்த பொறுமைசாலிகள்?
அடுத்த வருட சுதந்திர தினத்தில்கூட இதுதான் உரை (சந்தேகமிருந்தால் சரிபார்க்கவும்.
- நாட்டிற்கு அச்சுறுத்தலான தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம்!
- வறுமையை ஒழிப்போம், நாடெங்கும் குடிசைகளே இல்லாத நிலை உருவாக்கப்படும்.
- லஞ்சத்தை ஒழிப்போம் கறுப்புப்பணத்தை ஒழிப்போம், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்போம்!
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முன்னுரிமை. சரியும் ரூபாயின் மதிப்பை உயர்த்த நடவடிக்கை.
- நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவீதமாக உயர்த்துவோம்! உற்பத்தித் துறை ஊக்குவிக்கப்படும்.
- 100% கல்வியறிவு கிடைக்க வழிவகை செய்யப்படும். பெண்கள் கல்வியறிவு ஊக்குவிற்கப்படும்.
- பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வழி வகை செய்யும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்.
- மின்சாரம், உற்பத்தி ஆகியவற்றில் தன்னிறைவு அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
- உணவு பொருள்களை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு முன்னுரிமை. எளிய விவசாயக்கடன்கள் மூலம் விவசாயம் ஊக்குவிக்கப்படும்
- புதிய வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒற்றுமையாய் செயல்படுவோம்!
நிஜத்தில் இந்தியா!
மேலே சொன்னதில் ஏதாவது இந்த 66 வருடங்களில் நடந்திருக்கிறதா? – சில உண்மைகள்
- பாராளுமன்றத்தில் உள்ள 543 MP க்களில் 154 பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. இன்னும் வழக்கு தொடரமுடியாமல் எத்தனை பேருடையது இருக்கும்? இவர்களா நம் ஜனநாயகத்தை கட்டி நம் வாழ்க்கையை முன்னேற்றப்போகிறார்கள்
- உலகிலேயே சாலை விபத்துகளில் இந்தியாதான் No.1 - வருடந்தோறும் இந்தியாவில் மட்டும் 1.05 லட்சம் பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர்!
- ஒவ்வொரு 54 நிமிடக்களுக்கு ஒருமுறை கற்பழிப்பு முயற்சி நடக்கிறது
- ஒரு 1 மணி 42 நிமிடக்களுக்கு ஒருமுறை வரதட்சனைக்கொடுமையால் ஒரு பெண் உயிரிழக்கிறாள்
- லஞ்சம் வாங்காத அரசு அலுவலர் உண்டா? இருந்தால் அவர் விதிவிலக்கு (லட்சத்தில் ஒருவர்)
தீர்வு என்ன?
பணத்தை வாங்கி
ஓட்டுப்போடுவோர் இருக்கும்வரையும், காந்தி பெயர் கொண்டோரை எல்லாம் மகாத்மா
காந்தியாய் நினைப்போர் இருக்கும்வரையும், காவி உடை அணிந்தவரை எல்லாம் விவேகானதந்தராய்
நினைப்போர் இருக்கும் வரையும், தன் மூளைகொண்டு எல்லோரும் சிந்திக்காதவரை இந்தியா 2020-ல் அல்ல 2200-ல் கூட
வளர்ச்சியடைந்த நாடாய் மாறாது.
இதற்கு வேறு தீர்வெல்லாம்
கிடையாது.
- தேசத்தைக் காதலிக்கும் உங்களில் ஒருவன்!
Tweet |
கொண்டாட்டங்களில் மட்டும் கவனம் கொள்வோர்
ReplyDeleteதாங்கள் குறிப்பிட்டுள்ளவைகளிலும்
கவனம்கொண்டால் நல்லது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
.
ReplyDelete.
click >>> காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு சுதந்திரம் கொண்டாட? <<<< to read.
.
.
என்ன தேவைகள் பூர்த்தியாயிட்டுதுன்னு கொடி ஏத்துறாங்க?
ReplyDeleteஒரு நாள் விடுமுறை கிடைக்கும்,மல்லாக்கப் படுத்திட்டு டி.வி ல படம் பார்க்கலாம்.so don"t disturb
நல்ல கருத்துக்கள்... பல தகவல்கள்... பாராட்டுக்கள்... நன்றி...
ReplyDeleteஉயிரை துச்சமாக மதித்து பணிபுரியும் பல பேருக்கு வாழ்த்துக்கள் சொல்வோம்...
ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !!!
Deleteunmayaana thakaval!
ReplyDeleteமக்கள் உண்மையிலேயே மிகவும் பொறுமைசாலிகள்தான்... மக்கள் எந்த பிரச்சினையின் போதும் குனிந்து கொண்டு போய்விடுவார்கள் என்பது அரசியல்வாதிகளின் நம்பிக்கை. அதையே இன்று மக்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்... மக்கள் எவ்வளியோ... அரசும் அவ்வழியே...
ReplyDeleteசரி உடுங்க ஒரு மிட்டையவது கிடைக்குதே
ReplyDeleteநல்ல பயனுல்ள்ள தகவல்கள்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)