Blogger Widgets

ஏக் தா டைகர் சினிமா விமர்சனம் – சல்மான் கான், கத்ரீனா கைப் Ek Tha Tiger Review

  ஒவ்வொரு வருடமும் ஈத் சிறப்பாக சூப்பர் ஹிட் திரைப்படங்களைக்கொடுக்கும் சல்மான்கானின் (Wanted, Dabangg, Ready, Bodyguardவரிசையில் இந்த வருட ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் Ek Tha Tiger.

நடிப்பு : Salman Khan, Katrina Kaif                                                                                                                                                                    இசை : Sohail Sen 
இயக்கம்: Kabir Kha 
தயாரிப்பு : Aditya Chopra
கதை :

  இந்திய உளவுத்துறை ஏஜண்டும் பாகிஸ்தான் ஏஜண்டும் காதலித்து ஓடிப்போகிறார்கள்! அவர்களைக் கொல்ல இரண்டு நாடுகளும் துரத்துகின்றன. இந்த ஒருவரிதான் கதை (இது உண்மையாக நடந்ததாம்!)


  இந்த ஒரு வரியை அவ்வளவு சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறார்கள்! எதிரி நாட்டு ஏவுகணையை வரும் வழியிலேயே தாக்கி முறியடிக்கும் ஏவுகணையின் இந்திய சைன்டிஸ்ட் ஒருவர் அயர்லாந்தின் டுப்ளினில் பேராசிரியராக வேலை செய்கிறார். அவர் பாகிஸ்தானுக்கு ரகசியங்களைக் கொடுக்கிறாரோ என்பதைக் கண்காணிக்க இந்திய உளவுத்துறை ரா அனுப்பும் ஏஜன்ட்தான் “டைகர்” பேராசிரியருடன் இருக்கும் பெண்தான் கத்ரீனா. அவர் பாகிஸ்தான் ஏஜன்ட் என்று தெரியாமல் சல்மான் லவ்வுகிறார். கத்ரீனா பேராசியரின் ரகசியங்களைத் திருடும்போது சல்மான் பார்த்துவிடுகிறார். அவரை சுடுவதற்கு பதில் அவர்மீது கொண்ட காதலால் ஓடிவிடச் சொல்கிறார்.

  தகவல்களை எடுத்துக்கொண்டு இந்தியா திரும்பும் சல்மான், பிறகு இத்தியா பாகிஸ்தான் உற்பட அனைத்து நாடுகளும் கலந்துகொள்ளும் உலக நாடுகள் நட்பு பேச்சுவார்த்தைக்காக இஸ்தான்புல் செல்லும் குழுவுடன் செல்கிறார். பாகிஸ்தான் சார்பில்வரும் கத்ரீனாவும் சல்மானும் லவ்வி யாருக்கும் தெரியாமல் கியூபாவிற்கு ஓடிவிடுகின்றனர். இரண்டு நாடுகளும் அவர்களிடமிருக்கும் உளவுச்செய்திகளுக்காக அவர்களை தேடுகின்றனர். ஒரு சண்டையின்போது காமிராவில் இருவரும் பதிவாகி, அது இரண்டு நாடுகளுக்கும் தெரிந்து அவர்களைக் கொல்ல முயற்சிக்கின்றனர். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

குறைகள் :

  பட சீன்களைச் சுடுவதை இந்த பாலிவுட்கார்கள் எப்போதுதான் நிறுத்துவார்களோ தெரியவில்லை. ஸ்பைடர்மேன் ட்ரெயின்னை நிறுத்தும் சீன் வருமில்லையா? அதை அப்படியே சுட்டிருக்கிறார்கள்.

  கிளைமாக்ஸ் சீனில் சுடப்பட்ட பின்னும் பைக்கில் பறந்து சென்று பிளைட்டில் ஏறுவார் சல்மான். உடனே நண்பனிடம் நான் நக்கலாய் சொன்னேன் “இந்திய ஹீரோ!”

அந்த சீனுக்கு ஒரே கைதட்டல்! உடனே அவன் சொன்னான் “இந்திய ரசிகர்கள்”

சிறப்புகள்:

  சண்டைகள் அருமையாக உள்ளது. திரைக்கதை, வசனம், காதல், பாடல் என எல்லாமே நன்றாக இருக்கிறது.

  கத்ரீனா கைப் அவ்ளோ அழகு. கத்ரீனா செம சீன்மா. படம் முடிந்தபின் வரும் மாஷல்லா மாஷல்லா பாடலை பார்க்காமல் ஒருவர்கூட எழுந்து போகவில்லை J எல்லோரும் என்னை மாதிரியே இருக்காங்கப்பா!

  படம் முடிந்தவுடன் என் நண்பனிடம் “மச்சா, உனக்குத்தான் ஹிந்தி புரியாதே வா போலாம்!” அதற்கு அவன், “இல்ல மச்சா கொடுத்த காசுக்கு கத்ரீனாவையாவது பார்த்துட்டு வந்துடுறேன்! J”    


                                                          



இந்தப்படம் பாலிவுட்டின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதல் நாள் கலெக்சனாக. 31 கோடி ஈட்டியிருக்கிறது.

மார்க் - 6.5 / 10

க் தா டைகர் – செம என்டர்டெயின்மென்ட்..


3 COMMENTS:

  1. நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  2. சுருக்கமாக சொன்னாலும் விமர்சனம் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்

    ReplyDelete