Blogger Widgets

உலகம் அழிகிறது? தப்பிக்க யோசனைகள் – யாருக்கும் சொல்ல வேண்டாம்!


 மாயன் காலண்டர்ல டிசம்பர்-21 உடன் தேதி முடிவடைவதால் உலகம் அழியப்போவது உறுதி. இதை எப்படித் தடுக்க? நம்மால முடியாதது எதுவுமே இல்லை!


உலகம் அழிவதைத் தடுக்க!

  • காலண்டர்ல டிசம்பர் 21-க்கு பிறகு நிறைய தேதி கொண்ட பக்கங்களை ஒட்டிவிடலாம்! அழியப்போற உலகம் ஏமாந்திடும்.

  • உலகம் அழியும்போது பெரிய பென்சிலை வைத்து அழிய அழிய கூடவே வரைந்துவிடலாம்! அப்புறம் உலகம் அழியவே அழியாது.



உலகம் அழிந்தால் ஏற்படும் நன்மைகள்:

  • நம்ம லவ்வரோட கல்யாணத்திற்கு நாம் போக வேண்டிய கொடுமையான சந்தர்ப்பம் நிகழாது.

  • சச்சின் எப்ப ஓய்வு பெறுவார்னு இன்னும் 50 வருஷம் கேட்டுகிட்டு இருக்க வேண்டியதில்லை.

  • கரன்ட் வரும் நேரங்களைக் கணக்கெடுக்க வேண்டியதில்லை (இந்த ஆபர் தமிழ்நாட்டுக்கு மட்டும்)

  • மன்மோகனுக்கு காது கேட்கிற மிஷின் மாதிரி பேசுற மிஷின் ஒன்னு கண்டுபிடிக்க வேண்டியதில்லை.

  • சுவிஸ் பேங்கோட சேர்த்து கறுப்புப்பணமும் அழிந்து போய்டும்! அப்பாடா வடை எவனுக்குமே கிடைக்காது.

  • ரேப் பண்ணினவன், கொலை பண்ணினவனையெல்லாம் கோர்ட் வெறும் 100 வருடத்திற்குள் தண்டனை தருவதற்கு முன்னதாக மாயன் கொடுத்துவிடும்.

  • “தமிழர்களே தமிழர்களே என்னை கடலில்” இந்தக் கொடுமையை எல்லாம் கேட்க வேண்டியதில்லை.

  • நாம பீச்சுக்கு லவ் பெயிலியர், ஆபீஸ்ல மேனேஜர் திட்டினான்னு கடுப்புல தனியா போகும்போதுதான் அங்க ஒரு லவ் ஜோடி பப்பிள்கம்மை வாயில மாத்திகிட்டு இருப்பாங்க, அதையெல்லாம் பார்க்கிறதுக்கு உலகம் அழியறதே தேவலை.

  • எப்படியும் உலகம் அழியத்தானே போகுது? கிரடிட் கார்டு பில், லோன் என எதுவுமே கட்ட வேண்டாம். கடன் கொடுத்த இளிச்சவாயன்கள் ஏமாறட்டும்!  


உலகம் நிஜமாலுமே அழிந்திடுமா?


ஏண்டா டேய்! இன்னுமாடா இந்தமாதிரி புரளிகளை நம்பிகிட்டு இருக்கீகே? உலகமும் அழியாது ஒன்னும் அழியாது நீ தைரியமா போய் தூங்கு.

சரி எப்படி அழியாதுன்னு இவ்ளோ தைரியமா சொல்லுற?

உலகம் அழிஞ்சு போயிடுச்சுன்னா "நீ சொன்னது நடக்கலையே"ன்னு கேள்வி கேட்க நீங்க இருக்கவா போறீங்க?


2 COMMENTS:

  1. ஹா....ஹா....உங்கள் பதிவு மிக அருமை.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. ஊருக்குள்ளே உங்கள மாதிரி கமென்ட் பண்ணுற நல்லவங்களும் இருக்கிறாங்க!

      Delete