தேர்தல் 2014 :
2014-ம்
ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்
காந்தி- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி (பிறப்பு 17 செப், 1950)
போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
தினம் ஒரு ஊழல், மணிக்கொரு
கைது என காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை மக்கள் கொதிப்பில் உள்ளனர். அன்னா
ஹசாரேவை கைது செய்தது,
அவரை திகார் சிறையில் அடைத்தது, பாபா
ராம்தேவை நடத்திய விதம், 2G ஊழல்
அடுத்த பத்து வருடங்கள் நடக்கும் என்பதாலும், காமன்வெல்த் ஊழல், செயற்கைக்கோள்
ஊழல் (இது மறைக்கப் பட்டுவிட்டது) இன்னும் வராத ஊழல்கள் எத்தனையோ??? (India corruption என்றால் கூகுள் மொத்தம் 141,000,000
results-ஐ தருகிறது.)
2002ம்
ஆண்டு நடந்த குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, நரேந்திர
மோடியை தேசிய அரசியலில் ஈடுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அவரை பாஜக தேசியத்
தலைவராக்கவும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. குஜராத் சட்டசபையின் பதவி காலம் அடுத்த
ஆண்டு முடிவடைய உள்ளது. நரேந்திர மோடி மீது குஜராத் கலவர வழக்கு இன்னும்
நிலுவையில் இருப்பதால் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும்
கூறப்படுகிறது.
2014-ம்
ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என்பதே
அமெரிக்காவின் விருப்பம் என அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு அறிக்கை :-
அமெரிக்க நாடாளுமன்றத்தின்
ஆய்வுக் குழு CSR இந்தியா
தொடர்பான பல்வேறு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் செப்-இல் தாக்கல் செய்துள்ளது.
அதில் மோடியை வெகுவாகப் புகழ்ந்து ஒரு முழு நீள அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
“இந்தியாவில்
சிறந்த நிர்வாகம், ஆட்சி
புரிதல், வளர்ச்சி
ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன்
முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத்
மாநிலம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு
குஜராத்தின் பங்கு மிகப் பெரிதாகவும், முக்கியமானதாகவும் மாறியுள்ளது.
பிரதமர் பதவிக்கான பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில்
மிக முக்கியமானவராக மோடி உருவெடுத்துள்ளார். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மிகச்
சிறந்த நிர்வாகியாக அவர் உருவெடுத்துள்ளதால் அந்தப் போட்டிக்கு தானாகவே அவரது
பெயரும் வந்து நின்று விட்டது.
இந்தியாவில் வேறு எந்த
மாநிலத்தையும் விட குஜராத்தில் மிகப் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளார் மோடி. அதேசமயம், 2002ல் குஜராத்தில் நடந்த
முஸ்லீம்களுக்கு எதிரான மிகப் பெரிய வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவம் இன்னும்
மோடி மீதான பெருங்கறையாக நிற்கிறது.
அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், குஜராத்தில்
மிகச் சிறந்த நிர்வாகத்தை நடத்தி வருகிறார் மோடி. சிறப்பான பொருளாதார வளர்ச்சி, மக்களுக்குத்
தேவையான திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல், தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த
அதிகாரமட்டத்தில் உள்ள தடங்கல்களை நீக்குவது, ஊழலற்ற நிர்வாகம், விவேகத்துடன்
கூடிய வேகம் என அனைத்திலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார் மோடி.
மோடியின் சிறந்த ஆட்சி முறை, இந்தியாவின் தேசிய பொருளாதார
வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சமீப
ஆண்டுகளில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதத்தையும்
தாண்டியிருப்பது வியப்பாக உள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு, மின்சாரம், சாலை
வசதிகள் ஆகியவற்றுக்கு மோடி அரசு மிகுந்த முன்னுரிமை கொடுக்கிறது. உலக அளவில்
முன்னணியில் உள்ள பல்வேறு மோட்டார் தொழில் ஜாம்பவான்களை குஜராத் தன் பக்கம்
ஈர்த்துள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள்
தொகையில்,
5 சதவீதத்தை கொண்டுள்ள குஜராத், இந்தியாவின்
ஏற்றுமதியில், ஐந்தில்
ஒரு பங்கை தன் வசம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின்
ஆட்சியின் கீழ் குஜராத் மாநிலம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தேசிய
பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத்தின் பங்கு மிகப் பெரிதாகவும், முக்கியமானதாகவும்
மாறியுள்ளது. பிரதமர்
பதவிக்கான பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில் மிக முக்கியமானவராக மோடி
உருவெடுத்துள்ளார். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மிகச் சிறந்த நிர்வாகியாக அவர்
உருவெடுத்துள்ளதால் அந்தப் போட்டிக்கு தானாகவே அவரது பெயரும் வந்து நின்று
விட்டது. அவரைப்
பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்க
நாடாளுமன்ற ஆய்வுக் குழு மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
குஜராத்தின் வளர்ச்சி:
இந்தியாவில் ஒரு அரசு எப்படி
செயல்பட வேண்டும், ஒரு
அரசு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும், ஆளுமை எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கு குஜராத் மாநிலம் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
வளர்ச்சியில் இந்தியாவின் NO-1 மாநிலம்.
இந்தியாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திய மற்றும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஒரே
ஒரு மாநிலம். சாலை
வசதிகளில் இந்தியாவின் NO-1 மாநிலம், அதிக
தொழிற்சாலைகள் (முக்கியமாக MOTOR தொழிற்சாலைகள்)
ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மாநிலம்,
2001ல்
மோடி முதல்வர் ஆனபோது குஜராத்தின் பொருளாதாரம் பின்தங்கி இருந்தது. அரசாங்கத்தின் நிர்வாககட்டமைப்பை சீர்துருத்தியதன் விளைவாக, குஜராத்தில் தனது முதல் பதவி
காலத்தின் போது 10% க்கும்
மேலாக ஒரு மொத்த
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பதிவானது. இது
அனைத்து இந்திய மாநிலங்களை
விடவும் உயர்ந்த வளர்ச்சி விகிதம்
ஆகும்.
மோடி ஆரம்பித்த பல்வேறு திட்டங்கள்:-
1. பள்ளிகளில்
மதிய உணவுத்திட்டம். (நம்ம ஊர் திட்டம்பா!)
2. பெண் எழுத்தறிவு மற்றும் கல்வி
ஊக்குவித்தல்.(ஊக்கை விற்பதல்ல – அதிகப்படுதுதல்)
3. குஜராத் நீர் வளங்களை ஒரு உருவாக்கி
மேம்படுத்துதல்,
மற்றும் அதன் ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சி, சரியான பயன்பாடு.
4. விவசாய ஆராய்ச்சி ஆய்வகங்கள்
5. குழந்தை
இறப்பு விகிதத்தை குறைத்தல்
6. இனப்பெருக்க மற்றும் குழந்தை நல திட்டத்தின் கீழ் தடுப்பு
மற்றும் நோய்
நீக்கும் சேவைகளை
வழங்குதல்.
7. பெண் சிசுக்கொலை எதிராகபிரச்சாரம்
8. அரசு ஊழியர்கள் கல்வி மற்றும் பயிற்சி
பெறுதல்.
7 அக்டோபர் 2001-ல்
குஜராத் முதல்வரான நரேந்திர மோடி, 2007 இல் மீண்டும் அப்பதவிக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத்தில் மிக நீண்டகாலமாக ஆட்சி நடத்தி வரும்
முதல்வரும் அவரே என்பது குறிப்பிடத்தகது.
ஜெயலலிதா ஆதரவு???
மோடிக்கு
ஜெயலலிதா ஆதரவு கொடுப்பார் என நம்பப்படுகிறது. ஜெயலலிதா முதல்வர் ஆகும்
நிகழ்ச்சியில் நேரில் வந்து கலந்து கொண்டார் மோடி. அதேபோல மோடியின்
உண்ணாவிரதத்திற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் உண்ணாவிரதத்தில்
மைத்ரேயன், தம்பிதுரை
ஆகிய எம்பிக்கள் பங்கேற்கவுள்ளனர்.
மோடி
பிரதமரானால் இது மட்டும் இருக்காது – “எனக்கு தெரியாதே? அந்த
அமைச்சர் என்னிடம் சொல்லவே இல்லையே? நீங்கள் இதுபற்றி அந்த
அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும்”
சற்றுமுன் : - இக்கட்டுரை குறித்து கேள்விப்பட்டதும் இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும்
சத்யமூர்த்திபவனில் மொத்தம் பதினாறு பேர் கூடினர். அதில் 8பேர் தலைவர்கள். திடீரென
இரண்டு கோஷ்டிக்கிடையே சண்டை மூண்டது, ஒருவருக்கொருவர்
உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்துக்கொண்டும், வேட்டியை உருவிக்கொண்டும்
ரோட்டில் ஓடியது கண்கொள்ளாக் கட்சியாக இருந்தது.
Tweet |
0 COMMENTS:
Post a Comment