Blogger Widgets

தங்கபாலு கிச்சு கிச்சு பேச்சு



தற்போதைய செய்திகள் :



    1.   தமிழகத்தின் 12,618 உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான இடங்களிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கிச்சு கிச்சு பேச்சு.

அவரு எப்பவுமே இப்படித்தான்! ஒரு சின்ன டவுட்? இவ்வளவு பேர் கட்சில இருக்காங்களா என்ன?
2.   ஜாமீன் கோரி கனிமொழி-சரத்குமார் மனு: அக். 10ல் விசாரணை.

எல்லா மார்கெட்டுக்கும் போய் கேட்டோம்னே! நெய்மீன் இருக்குங்க்கிறான் நெத்திளிமீன் இருக்குங்க்கிறான் ஏன் சுறா கூட இருக்குங்க்கிறான் ஆனா ஜாமீன் மட்டும் இல்லேனுட்டான்!


3.   சீனாவில் செக்ஸ் மற்றும் காதல் பாடங்களைக் கொண்ட உளவியல் படிப்பு கட்டாயப் பாடமாகிறது. 


 சீனாவுக்கு ஒரு டிக்கெட்!


4.   மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மீது நடிகை சோனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். 

 

   ஏங்க அந்த மொரட்டு பொண்ண விட்ட நாட்ல எத்தனையோ பொண்ணுங்க இருக்கு!

    ஏழைக்கேத்த எள்ளுரண்டைங்கற மாதிரி ஒரு வத்தலோ தொத்தலோ! ஈயமோ       

    பித்தலையோ, பூசனதோ பூசாததோ அது மாதிரி ஒன்ன ட்ரை பண்ணகூடதா?

 

5.    உள்ளாட்சி‌‌த் தேர்தல் இட பங்கீடு குறித்து பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌ந்துவரு‌ம் வேளை‌யி‌ல் 10 மாநகரா‌ட்‌சி‌க்கு மேய‌ர் வே‌ட்பாள‌ர்களை அ.இ.அ.‌தி.மு.க பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளது தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்து‌க்கு அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌‌ள்ளது.

 

வடை போச்சே!  

 

6.   இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணம் மிகவும் மோசமாக அமைந்தது. டெஸ்டிலும் தோற்று, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இழந்தது. இதன் மூலம் உலக சாம்பியனான இந்திய அணி ஒரு வெற்றி கூட பெறாமல் வெறும் கையுடன் நாடு திரும்புகிறது.


ஆமா கப் எங்க?

தோனி : குண்டு விழுந்த ஈராக் நிதிக்கு கொடுத்திட்டோம்!



0 COMMENTS:

Post a Comment