Blogger Widgets

தமிழ் – அமீரகத்தில் தமிழர்கள்!

  அமீரகம் என்பது அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், ரஸ்அல்கைமா, புஜைரா, உம்அல் குவைன் ஆகிய ஏழு நாடுகளின் ஒருங்கிணைப்பு! தலைநகரம் அபுதாபி, ஆட்சி மொழி அராபிக்.


  மொத்த மக்கள் தொகை 80 லட்சம். அதில் இந்தியர்களின் எண்ணிக்கை - 20 லட்சம். மொத்த தமிழர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 2 லட்சம் (இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து). பெரும்பாலான தமிழர்கள் தமிழ் முஸ்லிம்கள். 


  பெட்ரோல் உற்பத்தியானது நாட்டின் பொருளாதாரத்தில் 33%  சதவிகிதம் கொண்டது. சவுதி அரேபியாஈரான் நாடுகளுக்கு அடுத்து அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு!


அமீரகம் தமிழ்ச்சங்கம்:

  U.A.E தமிழ்ச் சங்கம் 2008- ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது! பல்வேறு கலை, இசை, விளையாட்டு நிகழ்ச்சிகளை அமீரகத்தில் நடத்தி வருகின்றது. மேலும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு நிகழ்வுகளை நடத்துகின்றது.
இணையதள முகவரி : http://www.uaetamilsangam.com

தமிழ் உணவகங்கள்:

  போகும் இடங்களிலெல்லாம் தமிழ் உணவகங்களைக் காணலாம்! நம் ஊரின் சரவணபவன், ஆர்யாஸ், ஆச்சி செட்டிநாடுசிவ்ஸ்டார்பவன்அஞ்சப்பர், மயூரா என அனைத்து முன்னணி உணவகங்கள் ஒவ்வொன்றும்  ஒன்று முதல் பதினைந்துக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டிருக்கின்றன.

கல்வியில் தமிழ்:

  அமீரகத்தில் உள்ள பெரும்பாலான அனைத்து இந்திய கல்வி நிலையங்களும் இரண்டாம்நிலை மொழியாக தமிழைக் கற்றுக்கொள்ளல்லாம். (அல்லது ஹிந்திமலையாளம்உருது ஆகியவையும் கற்றுக்கொள்ளலாம்!) கல்வி அடிப்படை மொழி ஆங்கிலம்!


பண்பாடு:

  இஸ்லாமிய மதம் அங்கீகரிக்கப்பட்ட மதம். நாட்டின் எல்லா இடங்களிலும் பள்ளிவாசல்களைக் காணலாம்! மேலும் 31 கிருத்துவ சர்ச்களும் 1 சிவன் கோவிலும் உள்ளது. சிவன் கோவில் (சாய்பாபா கோவில்) பர்துபாயின் தேரா ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது! இந்த கோவிலில் பூஜைக்குத் தேவையான கடை வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். இங்கு ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், ஜூனியர் விகடன் உட்பட அனைத்து தமிழ் வார இதழ்களும் கிடைக்கும்!



 ரேடியோ ஹலோ 93.5  தமிழ் எப்.எம்:

  தினத்தந்தி குழுமத்தின் ரேடியோ ஹலோ எப்.எம் 2011ம் ஆண்டு துபாயில் தொடங்கப்பட்டது. 24 மணி நேர சேவை ஒளிபரப்பு - அமீரகம் முழுவதும் கேட்கலாம்! இப்பொழுது அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலக்கிக்கொண்டிருக்கின்றனர்!
சமூகதள முகவரி - https://www.facebook.com/radio895fm

தமிழ் கலை நிகழ்ச்சிகள்:

  ஒவ்வொரு மாதமும் தமிழ் கலை நிகழ்ச்சிகளுக்குப்பஞ்சமிருக்காது. பெரும்பாலான அனைத்து இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் என கலை நிகழ்ச்சி நடத்தாதவர்களே கிடையாது. ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட அனைத்து கலைஞர்களும் இங்கு கலை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்!

தமிழ் திரைப்படங்கள்:

  தமிழில் வெளியாகும் அனைத்து புதிய திரைப்படங்களும் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிவிடும்! நம்மூரைப்போல் ப்ளாக்கில் டிக்கெட் கிடைக்காது. பால் அபிசேகம் பண்ண முடியாது!


இந்தத் தமிழ்ப்பாடலில் துபாயின் முழுபகுதிகளையும் காணலாம்!



மேலும் தொடர


10 COMMENTS:

  1. Replies
    1. வெளிநாடுகளில் தமிழ் நன்றாகத்தான் வாழ்கிறது! நம் தமிழ்நாட்டில்தான் கேட்பாரற்று கிடக்கிறது!

      Delete
  2. மிகவும் அறியாத விஷயங்களை பகிர்ந்து உள்ளீர்கள்.. மிக்க நன்றி..

    ReplyDelete
  3. துபாய்க்கு மாற்றுவாங்களான்னு கணவரை கேட்டேன். என்னை வேணா மாற்றலாம் என்கிறார்! ஹ்ம்ம்..

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்... - அப்போ இப்பிடித்தானே உங்க ரியாக்சன் இருந்திருக்கும்!

      Delete
  4. ஒரு அறிவிப்பு - நம்ம தளத்தில புதுசா ஒரு எடிட்டர் ஜாயின் பண்ணிருக்காங்கோ, இனிமே எழுதுவதை கவனமா எழுதவேண்டும்!

    ReplyDelete
  5. சிறப்பான அமீரக தகவல்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. அமீரகத்தில் அரும்பணியாற்றும் தமிழ் நண்பர்களை எண்ணிணால் மகிழ்ச்சியாக இருக்கிறது..
    அமீரகத்திப் பற்றி நல்ல தகவல்கள்!! நன்றி!

    ReplyDelete