சமீபத்தில் நேபாளிய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்
(கலாய்த்துக் கொண்டிருந்தேன்!)
“முதல்ல கோவில் - நேபாளத்துல எந்தப்பக்கம் திரும்பினாலும் கோவில்கள்! இந்தியாவுல கூட அவ்வளவு இருக்காது.”
“உன்னோட சொந்த ஊர் எது?”
“காத்மாண்டு”
“ஓ! சைனாவுக்குள்ள இருக்குமே அந்த காத்மாண்டுவா?
“இல்லை – நேபாளம்”
“ஓ! நேபாளமா! இந்தியாவோட இருபத்தி ஒன்பதாவது ஸ்டேட்!”
“இவ்வளவு பேசறியே? நேபாளத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? அங்கே மூன்று ஸ்பெஷல்
இருக்கு! என்னன்னு சொல்லு பார்ப்பம்!”
“முதல்ல கோவில் - நேபாளத்துல எந்தப்பக்கம் திரும்பினாலும் கோவில்கள்! இந்தியாவுல கூட அவ்வளவு இருக்காது.”
“சரி இரண்டாவது?”
“அடுத்து டீ! எங்க போனாலும் டீ கிடைக்கும். தெருவுக்கு
பத்து டீக்கடை இருக்கும். 24-மணிநேரமும் டீ கிடைக்கும்!”
“சரி மூன்றாவது?”
“மூன்றாவது டாய்லெட்! நேபாளத்தின் எல்லா தெருக்களிலும்
டாய்லெட் இருக்கும்!”
“இதுல என்ன ஸ்பெஷல் எல்லா நாடுகளிலும் இருப்பதுதானே?”
“எல்லாமே ஓபன் டாய்லெட்!”
Tweet |
நாம் இங்கே கூர்க்கா என்று கிண்டல் அடிக்கிறோம். ஆனால் வருடம் பூராவும் ஜீவனத்திற்காக மனைவி-மக்களை பிரிந்திருக்கிறார்கள். மேலும் ஆண்கள் இங்கே வேலை நிமித்தம் இரவில் விழித்திருப்பதால் நேபாளத்தில் பெண்களும்(தத்தம் கணவர்களுக்காக) இரவில் தூங்குவதில்லையாம்..
ReplyDeleteசெய்யும் தொழிலால் யாரும் யாரையும்விட தாழ்ந்து போவதில்லை! செய்யும் தொழிலே தெய்வம் - அந்த தெய்வமான தொழிலின் முன் அனைவரும் சமம்!
Deleteமுக்கியமான விஷயம் - அந்த ஜோக் சொன்னது நேபாளிய நண்பர்தான் - பதிவை இன்னொருமுறை படிக்கவும்!
தெருவுக்கு பத்து டீ கடையா...?
ReplyDelete(பொய் சொன்னாலும் பொருந்த சொல்வதில்லையா... நிலவன்பன்.)
1. தெரு என்பது மிகவும் நீண்டது - பத்து டீக்கடை என்பதே மிகவும் குறைவு (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு?)
Delete2. அந்த ஜோக் சொன்னது நேபாளிய நண்பர்தான், கேட்டதுதான் நான்(பதிவை இன்னொருமுறை படிக்கவும்!) எனவே இதற்கும் நேக்கும் சம்பந்தமில்ல! (தப்பியாச்சு!)
3. சொல்வதே பொய் அதில் எதற்கு பொருத்தம் பார்க்க வேணும்?
:)
நல்லா பேசுனீங்க போங்க...
ReplyDeleteகடைசியில் கலாய்த்தது நீங்களா இல்ல அவரா?
தெரியலேயே ராசா! (சிவாஜி கணேசன் எக்ஸ்பிரசனோட!)
Deleteஓஒ...நைட் ரெஸ்டோரண்டா...சரி சரி.கண்டுபிடிக்கிறாராம் !
ReplyDeleteஎனக்கென்னா நீங்க ரெண்டு பேரும் றொம்ப
ReplyDeleteகலாய்க்கல போல
இந்த அவமானம் தேவையா நேக்கு?
Delete