Blogger Widgets

ரஜினி ஜோக்ஸ் - பிறந்தநாள் ஸ்பெஷல்

ரஜினி பிறந்த நாளான இன்று 12-12-12 சில ரஜினி ஜோக்ஸ்.!

  • ரஜினி  புட்பால் விளையாடும்போது சைடுல உதைக்கிறதுக்குப் பதிலா மேல உதைச்சதுதான் நிலா! கோல் ஆகமா மேல போனதுதான் வெள்ளி!

  • முதன்முதலா பூமில பகல் மட்டும்தான் இருந்துச்சு, ஒரு நாள் அசதில ரஜினி கண்ணமூடி தூங்கிட்டார் - அன்றிலிருந்துதான் இரவு/பகல் ஆரம்பிச்சுது

  • ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில வழக்கம்போல ரஜினிதான் மொதல்ல வந்தார். ஆச்சரியம் என்னன்னா லைட்டே அவருக்கு பின்னாடிதான் வந்தது.

  • ரஜினி கார்ல போகும்போது முன்னாடிபோன பஸ்ல மோதிட்டார். அந்த பஸ் முன்னாடி இருந்த இன்னொரு பஸ்ல மோதி இப்படியே லைனா இருந்த 10 பஸ்களும் மோதி நின்னுச்சு. அப்படி உண்டானதுதான் ரயில்!
 
  • விண்மீனெல்லாம் ஏன் தூரமா இருக்கு தெரியுமா? ரஜினி பார்த்துடக்கூடாதுன்னு பயந்துதான் அங்கே போயிடுச்சு

  • ஈசல் பறக்கும்போது ரஜினியோட மூச்சுக்காத்துபட்டு மேல எங்கயோ போயிடுச்சு. அப்புறம் பார்த்தா அதை எல்லோரும் ஏரோபிளான்ன்னு சொல்றாங்க.

  • சூரியன் ஏன் தெரியுமா சிவப்பா உதிக்குது? நைட்டு புல்லா ரஜினிகிட்டே அடிவாங்கி ரத்தத்தோட முழிக்குது! மாலை திரும்பவும் ரஜினி அடிப்பாறேன்ற பயத்திலேயே ரத்தத்தை ஒழுக்க ஆரம்பிக்குது!

  • ஒரு நாள் அடிபட்ட ரெண்டுபேருக்கு ரஜினி ரத்தம் கொடுத்தார், அன்றிலிருந்து ரெண்டுபேரையும் உலகமே விஞ்ஞானினு கொண்டாடிச்சு. 1. ஐன்ஸ்டீன், 2 தாமஸ் ஆல்வா எடிசன்

  • ரஜினி காட்டுக்குள்ளே சாப்பிடும்போது சோறு பிடிக்கலேன்னு துப்பிட்டார். காலைல பார்த்தா அங்க நெல்லு நாத்து அறுவடைக்கு ரெடியா இருந்துச்சு
                                                               

ரஜினிபோல் மனம்திறந்து பேசுவோர் சினிமாவில் வேறு யாருமில்லை. சூப்பர் ஸ்டார் நிலைமையில் இருந்துகொண்டு நான் இங்கு இருப்பதற்குக் காரணம் கமல் என்று சொல்வது ரஜினியால் மட்டுமே முடியும். அதான் ரஜினி. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


2 COMMENTS:

  1. வாழ்த்துக்கள் தலைவருக்கு ..

    ReplyDelete
  2. அருமையான பதிவு... அப்பிடியே எனது தளத்திற்கும் வருகைதந்து பதிவை வாசித்தபின் follow பண்ணுங்கள் நண்பரே.. http://sajirathan.blogspot.com/

    ReplyDelete