முதலில் தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் மற்ற
கலைஞர்கள் எல்லோருக்கும் ஒருமுறை சுத்திப்போட வேண்டும். இப்போதெல்லாம் ஒவ்வொரு
படமும் சிறப்பாகக்கொடுத்து மோசம் என்று சொல்வதே அரிதாகிவிட்டது.
தாண்டவம் – முதல்பாதி விறுவிறுப்பு+கலகலப்பு.
இரண்டாவது பாதி ஓகே. மொத்தத்தில் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கவேண்டிய படம்.
கதை:
சர்ச்சில் பியானோ வாசிக்கும் கண்பார்வையற்ற விக்ரம்,
மற்ற நேரங்களில் எங்கோ போய் கொலை செய்துவிட்டு வருகிறார். அவர் போகும்போதெல்லாம்
சந்தானம் டாக்ஸியில் போவதும் போலீஸ் சந்தானத்தை பிடித்து விசாரிப்பதும், சந்தானம்
போலீஸ் ஆபீசர் நாசரை கலாய்ப்பதும் செம! மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி
ஜாக்சன் சர்ச் வருகிறார். விக்ரமை காதலிக்கிறார். நான்காவது கொலையை செய்ய
முயற்சிக்கும்போது போலீஸ் வந்துவிடுகிறது. – இடைவேளை!
பிளாஷ்பேக் - இந்தியாவின் ராணுவ ரகசியங்கள்
அடங்கிய மாப்(வரைபடத்தாள்) ஒன்று பார்சலில் லண்டன் போகிறது. அதை வைத்து நாலே
மணிநேரத்தில் குண்டு வெடிக்க வைக்க முடியுமென்பதால் அதைத்தேடி ரா ஏஜன்ட் சிவா (விக்ரம்)
லண்டன் போகிறார். ஆனால் போன இடத்தில் விக்ரமின் நண்பரே (ரா ஏஜன்ட்) பணத்திற்காக
வரைபடத்தாளை தீவிரவாதிகள் கைக்கு கொடுத்துவிடுகிறார். குண்டு வெடித்து விக்ரம்
மனைவி அனுஷ்காவும், நண்பர் கென்னியும் இறந்துவிடுகிறார்கள். விக்ரமிற்கு கண்பார்வை
போய்விடுகிறது. கண்பார்வை போனபின்பு இவர்களை எப்படி பலி வாங்குகிறார் என்பதே கதை.