Blogger Widgets

ஃப்ரீ ஃபிளைட் டிக்கெட் வேணுமா? போலீசைக் கூப்பிடுங்க!

  53 வயதான பாகிஸ்தானி ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் பல நாட்களாக வேலைக்குச் செல்லாததால் நிறுவனம் அவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டது. வேலையிழந்து வேறு வேலைக்கு முயற்சித்து வேலை எதுவும் கிடைக்கவில்லை. விசாவும் முடிந்துவிட்டதால் துபாயில் தங்கியிருப்பது சட்டவிரோதம். பாகிஸ்தானுக்குத் திரும்பிப்போக பிளைட் டிக்கெட் வாங்கணுமே? கையில் மட்டுமல்ல பையிலும் பணமில்லை. என்ன செய்யலாம் என உட்கார்ந்து யோசித்த அவருக்கு கனநேரத்தில் வந்ததது ஒரு யோசனை.

  ஜனவரி 20ம் தேதியன்று அவசர உதவி எண்ணான 999ல் போலீஸ் கண்ட்ரோல் ரூமை தொடர்புகொண்டு என்னை நாடு கடத்தவேண்டும்(Deport) எனத் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார். ஒருமுறையல்ல, இருமுறையல்ல 100 தடவை தொடர்ந்து கூப்பிட்டிருக்கிறார்.


  இவரின் இம்சை தாங்கமுடியாமல் போலீஸ் வந்து கொத்தோடு தூக்கிக்கொண்டு போய்விட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இவர் பேச ஆரம்பித்ததும் வக்கீல், நீதிபதி என எல்லோரும் சிரித்துவிட்டன்ர். 

  "ஐயா, என்னை எப்படியாச்சும் நாடுகடத்தி எங்க ஊருக்கு அனுப்பிடுங்கையா, 15 வருசமா ரஸ் அல் கைமாவுல ஒரு கம்பனியிலேயும் அப்புறம் 16 வருசமா calligrapherஆக துபாய் போலீஸ்லயும் வேலை செஞ்சேன். நிறைய நாள் வேலைக்கி போகாததால என்னை வேலையைவிட்டு தூக்கிட்டாங்க. செஞ்ச வேலையும் போச்சு, விசாவும் இல்ல, என்னோட பாஸ்போர்ட் எங்க இருக்குன்னே தெரியல, பாஸ்போர்ட் இல்லாம யாருமே வேலை கொடுக்க மாட்டீறாங்க, ஃபிளைட் டிக்கெட் வாங்க காசில்லையா! அதான் வேற வழியில்லாம கடைசியா நானே கன்ட்ரோல் ரூமை 100 தடவைக்கும்மேல கூப்பிட்டு என்னை அனுப்பிச்சு வைக்கச் சொன்னேன்." என தன் குற்றத்தை ஒத்துக்கொண்டார்.

  அவர்மீது, ETISALAT வழங்கிய தொலைத்தொடர்பு சேவையை முறைகேடாக உபயோகித்தது மற்றும் துபாய் போலீஸ் அவசர எண்ணை 100 தடவைக்கும் மேல் கூப்பிட்டது ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு மார்ச்-19ல் வழக்கு திரும்ப விசாரணக்கு வரும்போது வழங்கப்படும்.

டிஸ்கி : நம்மெல்லாம் வரணும்னா காசுகொடுத்து வர வேண்டியிருக்கு. இந்தமாதிரி ஃப்ரீயா போக யோசிக்கனுமோ? அதுக்கு மூளை வேணுமோ?? 


5 COMMENTS:

  1. என்னே சாதுர்யம்...! ஹா... ஹா....

    ReplyDelete
  2. தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை. வெளி நாட்டில் சிக்கி கொண்ட ஒருவரை தாய் நாட்டில் சேர்க்கும் சர்வதேச அமைப்பு இந்த பணியை இலவசமாக செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் தெரிஞ்சா இங்க ஏன் இருக்காரு அவரு? அவ்வ்வ்

      Delete