Blogger Widgets

நீ எதற்கு செத்துப்போனாய்?


   மாலை நேரம், சுடுகாட்டின் ஓரமாய் ஒரு கல்லறையின் அருகில் ஒருவன் அழுதுகொண்டிருந்தான்.

"நீ
 ஏன் சாக வேண்டும் ஏன்? நீ எதற்காகச் செத்துப்போனாய்?" என்று சத்தமாக அழுது கொண்டிருந்தான்.


அந்த வழியாகக் வந்த ஒருவர், அவனைப் பார்த்துவிட்டு, “மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள், சாவு எல்லோருக்கும் வரும். இவர் உங்களுக்கு நெருங்கியவரா?” என்றார்.

"இல்லை! இவரை நான் சந்தித்தது கூட இல்லை!"

“பிறகு ஏன், நீ ஏன் சாக வேண்டும்? நீ எதற்காகச் செத்துப்போனாய் என்று அழுது கொண்டிருக்கிறீர்கள்?”

"இவர் என் மனைவியின் முதல் கணவன்!"


10 COMMENTS:

  1. ரைட்டு...

    மனைவி அவ்வளவு கொடுமையாங்க...

    ReplyDelete
  2. கவிதை வீதி... சௌந்தர் // - கோர்த்துவிடுரதுல அம்புட்டு ஆசை

    ReplyDelete
  3. செம செம செம கடி.

    ReplyDelete
  4. நகைச்சுவை நிறைந்த கவி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //விச்சு said...
    செம செம செம கடி.// - நன்றி!

    ReplyDelete
  6. Esther sabi உங்க காமெடிக்கி அளவே இல்லையா??? மேலே இருக்கிறது கதை!! (கதையா கவிதையான்னு கூட தெரியாத அளவுக்கா எழுதறேன் sorry டைப் பண்ணுறேன்??? இந்த கேவலம் நேக்கு தேவையா???)

    ReplyDelete
  7. கடைசி வரி பல கேள்விகளை சிந்திக்க வைத்துவிட்டு நிறைவுறுகிறதுது. நல்ல குறுங்கதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. தீபிகா(Theepika) நோக்காவது இது கதைன்னு புரிஞ்சதே!

    ReplyDelete
  9. உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்

    ReplyDelete
  10. Esther sabi தோழிக்கு நன்றி!

    ReplyDelete