புதிதாய்க் கல்யாணமான
கணவனும் மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள். சூரியன்
ஒளிந்துகொண்ட நேரம் சரியாய் இரவு ஏழுமணி. திடீரென செய்தியில் தற்போதைய செய்தி
ஒன்று வந்தது.
“தற்போதைய செய்தி – சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து பிரபல
கொள்ளைக்காரன் பேட்டைசேகர் தப்பித்துவிட்டான். இவன் மீது 15 கொள்ளை வழக்குகளும் 11 கற்பழிப்பு வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் எச்சரிக்கையுடன்
இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.”
உடனே கணவன், “டியர் கதவெல்லாம் மூடித்தான் இருக்கிறது?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்” அவள் சொல்லி முடிப்பதற்குள் சமையலறையில் ஏதோ உருளும் சத்தம்
கேட்டது.
மனைவி எழுந்து போனாள்.
ஐந்து நிமிடம் எந்த சத்தமுமில்லை. ஆறாவது நிமிடம் டிவியில் காட்டிய
அதே கொள்ளைக்காரன் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு ஹாலை நோக்கி, அவளையும்
தள்ளிக்கொண்டு வந்தான்.
“சத்தம் போட்டால் இருவரது உயிரும் இருக்காது! நான் சொல்வதை மட்டும்தான்
கேட்கவேண்டும்! ஒருவர் சத்தம் போட்டாலும் என்னுடைய கொலையில் இரண்டு
அதிகரித்துவிடும்” என்றான்.
“நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்கிறோம்” என்றான் கணவன்.
“நீ புத்திசாலி!” என்று கூறிய கொள்ளைக்காரன் ஹாலிலிருந்த எதிரெதிர் சோபாவில் இருவரையும் கட்டிப்போட்டான். பின்
மனைவியின் அருகே சென்று அவள் தலையைப் பிடித்து உதட்டுக்கு நேரே முகத்தை வைத்து ஏதோ
சொன்னான். மனைவி குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.
கொள்ளைக்காரன் சத்தாமாய்ச் சிரிக்க ஆரம்பித்தான். இரு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுக் கழிவறையை நோக்கிச் சென்றான்.
உடனே கணவன், “டியர்! அவனைப் பார்த்தால் கொடூரமாக இருக்கிறது. உன்னுடைய
உயிர் எனக்கு மிகவும் முக்கியம், அவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்!”
மனைவி இன்னும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
“மனதைத் தேற்றிக்கொள்! என்ன செய்வது என்ன நடந்தாலும் சரி, அவன் உன்னை
என்ன செய்தாலும் சரி சத்தம் போட்டுவிடாதே, உன் உயிர் எனக்கு மிகவும் முக்கியம். ஐ
லவ் யூ!” என்றான். அவனின் குரல் உடைந்திருந்தது.
மனைவி அழுதுகொண்டே சொன்னாள், “அந்தக் கொள்ளைக்காரன் என்னருகே வந்து
தலைப் பிடித்து சொன்னான், உன் கணவன் பார்ப்பதற்கு இவ்வளவு அழகா இருக்கான், அவனின் உதட்டைப்
பார்க்கும்போதே என்னவோ செய்கிறது. இரு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுப்
போனான். அன்பே உங்கள் உயிர் எனக்கு மிகவும் முக்கியம். என்ன நடந்தாலும் சரி சத்தம்
போட்டுவிடாதீர்கள். ஐ லவ் யூ!”
இது
நேக்கு வந்த மெயிலாக்கும்!
Tweet |
0 COMMENTS:
Post a Comment