Blogger Widgets

சசிகலா பலிகடா? எல்லாம் நாடகம்?

  ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா நேற்று சாட்சியம் அளிக்கையில் “வங்கி கணக்கு வழக்குகளை நானே கையாண்டேன், எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு” என்று கூறி கதறியழுதிருக்கிறார்.

  இன்னொருபுறம் தஞ்சாவூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த நிலமோசடி புகாரின் பேரில், தஞ்சை போலீசார் சென்னை பெசன்ட் நகரில் சசிகலா கணவர் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன், உறவினர் ராவணன் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ளனர். 

சந்தேகம் 1:

  நமக்கு முதலில் சந்தேகம் வருவதே போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட விஷயம். ஏனெனில் பல்லாண்டுகால நட்பு மற்றும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெ. சசிகலா இருவருமே முக்கிய குற்றவாளிகள். இதில் யார் யாரை பகைத்துக்கொண்டாலும் நஷ்டம் இருவருக்கும்தான். இதையெல்லாம் யோசிக்காமலா ஜெ சசியை வீட்டைவிட்டு அனுப்பியிருப்பார்? அப்படி போயஸ் தோட்டத்தைவிட்டு அனுப்புவதற்கு சசிகலா செய்ததாகக் கூறப்படுபவை அனைத்துமே மீடியாக்கள் உருவாக்கியவைதான். உண்மையான காரணங்களை ஒருமுறை கூட சம்பந்தப்பட்ட இருவருமே சொல்லவில்லை.

சந்தேகம் 2:

  மேற்கண்டவை அனைத்தும் உண்மை என வைத்துக்கொண்டால் (போயஸ் தோட்டத்திலிருந்து சசி வெளியேறியது) சசியின் சொந்தங்கள் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்படும்போது ஏன் ஜெவிற்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க வேண்டும். மாட்டிவிடும் உணர்ச்சிதான் வர வேண்டும்? அல்லது இந்த நடவடிக்கைகள் சசியை எச்சரிக்க நடத்தப்படுகின்றனவா?

  இவைகள் எல்லாம் முன்பே திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றனவா? (போயஸ் தோட்டத்திலிருந்து சசி வெளியேறுவதற்கு முன்பே!) அல்லது 2ஜி வழக்கில் ராசாவை பலிகடா ஆக்கியதுபோல் இந்த வழக்கில் சசியை பலிகடா ஆக்கப்போகிரார்களா???

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!


UPDATE :


  காலத்தின் பதில் : நாம் சொன்னது போலவே நாடகம் முடிந்துவிட்டது - இறுதியில் தோழிகள் சேர்ந்துவிடுகின்றனர் - THE END


0 COMMENTS:

Post a Comment