Blogger Widgets

தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை


  • தன் பாவத்தை தானே கழுவவேண்டும் என்பதற்கு உதாரணம் கழிவறைகளில் போடப்படும் சிகரெட் துண்டுகள்!

  • கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்!

  • ஆசையை வளரவிடாதே அது "கள்" ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை"கள்")

  • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் - ஒவ்வொரு முறையும்!!

  • இந்தியாவில தீர்ப்பு சொல்லும்போது வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாளி உயிரோடு இருப்பதில்லை.

  • காலம் கடந்து கொடுக்கப்படும் எந்த ஒரு சரியான தீர்ப்பும் தவறானதே!

  • சில தவறுகள் மன்னிக்கப்படாததுதான் மிகப்பெரிய தவறாய் மாறிவிடுகின்றது!!

  • நல்லதாய் ஒரு காரியம் செய் என்பதற்கு வேண்டாத ஒருவருக்குக் காரியம் செய் என்பது பொருளல்ல!

  • கஷ்டம் என்றால் என்னவவென்று தெரிந்துகொள்ளவே கஷ்டப்படுகிறேன்!      

  • வாழ்க்கைல நல்லவனா இருப்பதைவிட நல்லவனா நடிப்பது ரொம்ப கஷ்டம்டா சாமி! 


எனக்கு பிடித்த ஒரு நகைச்சவை குறும்பு நிகழ்ச்சி::

                                                          


லைக் பண்ணுன்னு சொன்னா மட்டும் பண்ணவா போறேள்? எப்படியோ போங்கப்பா!


12 COMMENTS:

  1. இது போல தத்துவமா போட்டு தாக்குரவங்கள மனசு தானா 'நல்லவ'ன்னு நம்ப ஆரம்பிச்சுடுது..

    பாதி சாமியாரும் இப்டி தான் உருவாகுறாங்க போல..

    ReplyDelete
    Replies
    1. உலகில் எல்லோரும் நல்லவர்கள்தான் - அவரவர் மனங்களில்! :)

      Delete
  2. நிலவன்பன் சார், துபாய்லயும் தமிழ் காலேண்டேர் கிடைக்குது தானே?

    ReplyDelete
    Replies
    1. இல்ல மேடம்! கிடைச்சா இந்த மாதிரி தினம் ஒரு பதிவு போடுவேன், அப்ப உங்க நிலைமை?

      அவ்வ்வ்-தான்!

      Delete
  3. நல்ல நகைச்சுவை .நன்றி

    ReplyDelete
  4. தத்துவமும் நகைச்சுவையும் அருமையாக இருந்தது
    வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. தத்துவம் அருமை......

    ReplyDelete
  6. தத்துவம் நல்லம்

    ReplyDelete