Blogger Widgets

முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

  அது என்னவோ இந்த முட்டாள்கள் தினத்தில் APRIL FOOL செய்வதில் நமக்கெல்லாம் அவ்வளவு ஆனந்தம்! கீழே உள்ளவற்றைப் படித்துவிட்டு பின்னர் கூறவும் யார் முட்டாளென்று!
  • ஆளுர அரசாங்கம் மோசமமென்று கூறி, பேய் வேண்டாமென்று பிசாசைத் தேர்ந்தெடுப்போம், பின் ஐந்து வருடம் கழித்து, பிசாசு வேண்டாமென்று பேயைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் மறுபடியும் அதான்!

  • யார் வந்தாலும் ஒன்றும் நமக்கு செய்யப்போவதில்லை என்று தெரிந்தும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை முட்டாள் என்று மை வைத்துவிட்டு வருவோம்! இருக்கும் MLA, MPக்களில் எவ்வளவு பேர் படித்தவர், எவ்வளவு பேர் கோடீஸ்வரர், எவ்வளவு பேர் ரவுடி என்று பாருங்கள், வித்தியாசம் புரியும்!

  • நாட்டுக்கு எவன் நல்லது செய்வான் என்று ஓட்டுபோடுவதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன், இப்பவெல்லாம் எவ்வளவு இலவசம், குவாட்டர், கோழி பிரியாணி! அல்லது என் சாதி, மதம், இனம்!


  • எவ்வளவுதான் ஊழல் செய்தாலும், கற்பழிப்பே செய்தாலும், ஏன் கொலையே செய்தாலும் கூட, வழக்கு அவனின் வாழ்நாள் முழுவதும் நடக்கும்! தீர்ப்பு வருவதற்கு முன் அவன் செத்துவிடுவான்! அப்புறம் யாருக்கையா தண்டனை கொடுப்பீங்க?

  • எவ்வளவு குற்றம் செய்தாலும் ஜாமீனில் வந்து விடலாம்! பிறகென்ன அடுத்த குற்றத்தை எப்படி பண்ணுவது என்று யோசிக்க வேண்டியதுதானே? - எல்லா சட்டங்களும் குற்றவாளிகளுக்கே சாதகமாய் எழுதப்பட்டது ஏனோ?

  • அரசாங்கம் என்னதான் கெஞ்சினாலும் சரி, கால்ல விழுந்து கதறினாலும் சரி - பைக்ல ஹெல்மெட் போடுற பழக்கமே கிடையாது (நானும்தேன்!). பக்கத்திலதானே போகிறேன் என்று விளக்கம் வேறு! - விபத்து சொல்லிக்கிட்டு வராதுடா வென்றுகளா!

  • ஒவ்வொரு நடிகருக்கும் பால் அபிசேகம், பன்னீர் அபிசேகம், அவர்தான் என் வாழ்நாள் ஹீரோ என்று சொல்லிக்கிட்டு அலையிறோம்! ஒரு நாள் கூட ஓட தகுதியில்லாத படத்தையெல்லாம் 50 நாட்கள் ஓட வைக்கிறோம்! மேக்-அப் போட்டா கழுதையும் குதிரை ஆகும்! இது நமக்கேன் தெரிவதில்லை?

  • தன் வாழ்நாளையே நமக்காச் செலவிடும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள் எத்தனை பேர்? இவர்களுக்கெல்லாம் ஏன் தெரிவதில்லை குருத்தும் பழுக்கும்!

  • வாழ்க்கைல பாதிநாள் பணம் தேடிவதிலும், மீதி நாள் தூங்குவதிலுமே போய்விடுகிறது! அப்புறம் நமக்கெதுக்கு வாழ்க்கை? கிடைச்ச ஒரு வாழ்க்கைய சந்தோசமா ஏத்துக்கறமா? சந்தோசங்களை அனுபவிக்கறமா?

  இப்ப சொல்லுங்க நீங்க APRIL FOOL பண்ணியவர் முட்டாளா? இல்லை வருடம் முழுவதும் APRIL FOOL ஆகுற நீங்க முட்டாளா?




11 COMMENTS:

  1. நாளைய நாளுக்கேற்ற நல்லதோர் பதிவு

    ReplyDelete
  2. ஓகே...வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்க அதெப்படிங்க ஒரே வார்த்தைல கோர்த்துவிடரீங்கோ?

      Delete
  3. \\ அரசாங்கம் என்னதான் கெஞ்சினாலும் சரி, கால்ல விழுந்து கதறினாலும் சரி - பைக்ல ஹெல்மெட் போடுற பழக்கமே கிடையாது (நானும்தேன்!).\\ இவ்வளவு புலம்பும் நீங்களே ஏன் போட மாட்டேங்கிறீங்க??

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் எப்படி பக்கத்து வீட்டு பொண்ண சைட் அடிக்கறது?

      Delete
  4. \\ஒவ்வொரு நடிகருக்கும் பால் அபிசேகம், பன்னீர் அபிசேகம், அவர்தான் என் வாழ்நாள் ஹீரோ என்று சொல்லிக்கிட்டு அலையிறோம்! ஒரு நாள் கூட ஓட தகுதியில்லாத படத்தையெல்லாம் 50 நாட்கள் ஓட வைக்கிறோம்! மேக்-அப் போட்டா கழுதையும் குதிரை ஆகும்! இது நமக்கேன் தெரிவதில்லை?\\ இதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தது ஆனால் இப்போது இல்லை. வருடத்திற்கு 200 படங்கள் வந்தால் அஞ்சோ பத்தோதான் போட்ட முதலை திருப்பித் தருகிறது அதிலும் ஒன்றோ இரண்டோதான் ஐம்பது நூறு நாட்கள் ஓடுகின்றன. தற்போது திருட்டு சி.டி.க்கள் இணையம் எல்லாமும் சேர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்டுவிட்டன.

    ReplyDelete
  5. \\வாழ்க்கைல பாதிநாள் பணம் தேடிவதிலும், மீதி நாள் தூங்குவதிலுமே போய்விடுகிறது! அப்புறம் நமக்கெதுக்கு வாழ்க்கை? கிடைச்ச ஒரு வாழ்க்கைய சந்தோசமா ஏத்துக்கறமா? சந்தோசங்களை அனுபவிக்கறமா?\\ இதென்னது, ஏதோ சாமியார் பிரசங்கம் பண்ற மாதிரியே இருக்கே!!

    ReplyDelete
    Replies
    1. அன்பானந்தாவின் அறிவுரைகள்! கேட்கிறவனுக்கு சந்தோசம்! கேட்காதவனுக்கு வெறும் தோஷம்!

      Delete
  6. நீங்கள் அரசியலில் கிரிமினல்கள், ஓட்டுக்குப் பணம், மாறி மாறி திருடர்களே [திருடிகளே] ஆட்சிக்கு வருவது பற்றி வருத்தப் பட்டிருக்கிறீர்கள். மக்களாட்சி என்பது சக்தி வாய்ந்த ஆயுதம் அது யார் கையில் இருக்கிறது என்பது மிக முக்கியம். கத்தி மருத்துவர் கையில் இருந்தால் அறுவை சிகிச்சை செய்வார், அதே கத்தி ஒரு புத்தி சுவாதீனம் இல்லாதவன் கையில் இருந்தால்...?????? அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மக்களாட்சிதான் நடக்கிறது ஆனால் இந்த அளவுக்கு ஊழல் என்பது இல்லை. காரணம் என்ன? மக்கள் இளிச்ச வாயர்கள் அல்ல. இங்கே மக்கள் ஏமாளிகள், ஒற்றுமையில்லாதவர்கள், பின் விளைவுகளை ஒரு கணமும் சிந்திக்கத் தெரியாத ஆட்டு மந்தைகள். அப்புறம் என்ன, இவர்கள் புத்திக்குத் தக்க அரசாங்கம் தான் கிடைக்கும். லஞ்சம் கொடுக்க மாட்டேன், ஓட்டுக்கு காசு வாங்க மாட்டேன், ஊழல் செய்தவன் எங்கே போனாலும் விடமாட்டோம்னு எல்லோரும் ஒற்றுமையாய் இருக்கட்டுமே, அப்புறம் பார்க்கலாம் எவன்[ள்] ஊழல் செய்வான்[ள்] என்று.

    ReplyDelete
  7. பின் விளைவுகளை ஒரு கணமும் சிந்திக்கத் தெரியாத ஆட்டு மந்தைகள். அப்புறம் என்ன, இவர்கள் புத்திக்குத் தக்க அரசாங்கம் தான் கிடைக்கும். லஞ்சம் கொடுக்க மாட்டேன், ஓட்டுக்கு காசு வாங்க மாட்டேன், ஊழல் செய்தவன் எங்கே போனாலும் விடமாட்டோம்னு எல்லோரும் ஒற்றுமையாய் இருக்கட்டுமே, அப்புறம் பார்க்கலாம் எவன்[ள்] ஊழல் செய்வான்[ள்] என்று............

    april 1st-il mattum illai, 5 varudangalilum , dhinamum naam sinthikka vaendia visayam.
    miha chariyaana pathivu , naNbarae.

    ReplyDelete
    Replies
    1. //பின் விளைவுகளை ஒரு கணமும் சிந்திக்கத் தெரியாத ஆட்டு மந்தைகள்// அவ்வ்வ்!!!

      Delete